2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கைகலப்பில் விவசாயி காயம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 13 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தரசேன வயல்வெளியில் விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட கைலப்பில் காயமடைந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆதம்பாவா அகமட்லெவ்வை (வயது 55) என்பவர்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் தனது வயலுக்கு நேற்று சனிக்கிழமை (12) மாலை நீர்பாய்சிக்கொண்டிருந்தார். இதன்போது, இவருக்கும் ஏனைய விவசாயிகளுக்குமிடையில்   நீர்விநியோகம் சம்பந்தமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது  கைகலப்பில் முடிந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X