2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வாய்க்கால் புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 13 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

வாகனேரி விவசாயக் கண்டத்தின் முள்ளிவட்டவான் விவசாயக் கண்டத்திலுள்ள டி 1 வாய்க்கால் புனரமைப்புக்கு 20 இலட்சம் ரூபாய்  நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்குடா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விவசாய சம்மேளனத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இந்த நிதியை  பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வாய்க்காலை புனரமைப்பதன் மூலம் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள், சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள்,    கால்நடை வளர்ப்போர் என பலரும் நன்மை அடையக் கூடியதாகவிருக்கும் எனவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X