2025 மே 02, வெள்ளிக்கிழமை

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆட்சிமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்                          

நோர்வே ஆசிரியர் சங்க அனுசரணையுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிடச் செயலமர்வு சனிக்கிழமை (12) திருகோணமலை கோணலிங்கம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மேற்படி சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் தமிழர் அசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன், நிர்வாகச் செயலாளர் க.நல்லதம்பி, பத்திரிகை செயலாளர் சு.உதயகுமார் ஆகியோரினால், ‘சர்வதேச நிலையில் மாணவர் கல்வி அபிவிருத்தி’, ‘தலைமைத்துவமும் தொழிற்சங்கமும்’, ‘நாமும் சங்கத்தின் இன்றைய நிலையும்’ போன்ற தலைப்புக்களில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X