2025 மே 02, வெள்ளிக்கிழமை

விவேகானந்தபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 13 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்சக்திவேல்,க.ருத்திரன்               
                      

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (12)  இரவு  புகுந்த 07 காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்துள்ளதாக விவேகானந்தபுரம் கிராமத்தின் கிராம சேவை உத்தியோகஸ்தர் ந.ராகுலன் தெரிவித்தார்.

இதனால், ஒரு வீடு முற்றாகச்  சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் பின்னர் கிராம மக்கள் ஒன்றுகூடி தீப்பந்தங்கள் ஏந்தி  மேற்படி யானைகளை விரட்டியதாகவும்  அவர் கூறினார்.

இதேவேளை வெல்லாவெளி பிரதான வீதியிலுள்ள  பிரதேச செயலகத்தினுள் புகுந்த காட்டு யானை ஒன்று பிரதேச செயலகத்தின் உபகளஞ்சிய அறைக்கதவை உடைத்ததுடன்,  அங்கிருந்த வேலிகளையும் உடைத்துச் சென்றுள்ளது. இதனால், பிரதேச செயலகத்துக்கு 10,000  ரூபாய் வரை நட்டம்  ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.

மேலும், வெல்லவெளி மாரியம்மன் கோவில்; வாயிற்கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த காட்டு யானை ஒன்று, 5 நெல்மூடைகளை சேதப்படுத்தியுள்ளது.

கோவில் களஞ்சியசாலையின்  இருபக்க கூரைகளை உடைத்துள்ளதுடன்,  ஒரு பக்க மதிலையும் உடைத்துச் சென்றுள்ளதாகவும் இதனால், கோவிலுக்கு சுமார் 75,000 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் வ.மேகநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் வ.மேகநாதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X