2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் பீதியில்

Kogilavani   / 2014 ஜூலை 13 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


“மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திற்;குள் சனிக்கிழமை(12) இரவு புகுந்த யானைகள்  பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி சென்றுள்ளதாகவும் இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘வெல்லாவெளி பிரதேசத்திற்;குள் நேற்று இரவு புகுந்த இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் பிரதேச செயலகம் மற்றும் ஆலயங்களையும் சேதப்படுத்தியுள்ளன.

யானையின் தாக்குதல் காரணமாக பிரதேச செயலகத்தின் நுழைவாயில் கதவுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகத்துக்கு பின்புறமாகவுள்ள கல்வித்திணைக்களத்துக்கு சொந்தமான கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மதில்களும் உடைக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் யானையின் தாக்குதலால் சேதமடைந்துள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளும் யானைகளினால் அழிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, விவேகானந்தபுரம் பகுதியில் இரண்டு வீடுகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறுபோக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல வயல்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானை கூட்டம் வெல்லாவெளி பிரதேசத்துக்குள் புகுந்ததினால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சம் காரணமாக வீதிகளுக்கு வந்து யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் யானைகளை துரத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தமுனைந்தபோதிலும் அவர்களின் தொலைபேசிகளில் தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்பட்டது. இதனால், இரவு 10.30 மணிக்கு பின்பே அவர்களை தொடர்புகொள்ளமுடிந்தது.  

போரதீவுப்பற்றின் விவேகானந்தபுரத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அங்கு ஒரு அதிகாரியே கடமையில் இருந்தார்.

அவர்களது அலுவலகத்தினை தாண்டியே யானைகள் வெல்லாவெளி பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளதன. 

இராணுவத்தினரே யானைகளை விரட்டுவதில் மிகவும் ஒத்துழைப்பு வழங்கினர்.  அவர்கள் இல்லாவிட்டால் பாரிய சேதங்களை யானைகள் ஏற்படுத்தியிருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X