2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நீர்ப்பாசன பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை மேற்கு விவசாயக் கண்டத்தில் தற்போது நீர்ப்பாசனத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை  நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம்  வெலிக்கந்தையிலுள்ள கிழக்கு மாகாணத்திற்கான இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம்  சனிக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திற்கான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால்பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், 12 விவசாயக்கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்குபற்றினர்.

இதன்போது, தங்களது வயல் நிலங்களுக்கு மாதுறுஓயா ஆற்று நீர்ப்பாசனம் போதியளவு கிடைக்கப் பெறுவதில்லையென்றும் இதனால், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக  கல்குடா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விவசாய சம்மேளனத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

நிலவரங்களை கேட்டறிந்துகொண்ட இராணுவத் தளபதி, தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை போக்கும் முகமாக 03 நாட்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.

இதன்போது, மாதுறுஓயா நீர்பாசனத்திற்கான பணிப்பாளர் எஸ்.தயானந்தவும் பிரசன்னமாயிருந்ததாகவும் இவர்கள் இருவருக்குமிடையில் பேசிக்கொண்ட தீர்மானத்தின் பயனாக இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

தற்போது கிழக்கில் வறட்சி நிலவுவதனால் நீரின்றி பெருமளவு வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று புணானை கிழக்கில் சுமார் 8,500 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்படக்கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X