2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியைச் சேர்ந்த கைதிக்கு வீட்டு விடுமுறை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்கும் திட்டத்தின் கீழ், பல்லேகல சிறைச்சாலையில் நீண்டகாலமாக கைதியாக உள்ள  காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் வீட்டு விடுமுறையில் அவரது  வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இவர் ஒருவார காலம் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு  சென்றுள்ளதாக  சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.றசூல்ஸா தெரிவித்தார்.

நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்கும் திட்டத்தை புனர்வாழ்வு மற்றும்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இச்சிறைக்கைதிகளின் நன்னடத்தை மற்றும் அவர்களின் வீட்டுச் சூழல் ஆகியவை தொடர்பில் அவர்கள் இருக்கும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு, சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்  வழங்கும் அறிக்கையை வைத்து இவர்களுக்கு வீட்டு விடுமுறை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கைதிகளை அவர்களின் குடும்பங்களுடன்; இணைப்பதையும் அவர்களை சமூகத்தில் நல்லவர்களாக உருவாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

வீட்டு விடுமுறையில் வீட்டுக்கு செல்லும் கைதி தனது நன்னடத்தையை மேலும் உறுதிப்படுத்தி நடந்துகொள்ளும் பட்சத்தில், அவருக்கு மீண்டும் இவ்வாறான வீட்டு விடுமுறை வழங்க சமுதாய சீர்திருத்த திணைக்களம் சிபாரிசு செய்யும் எனவும் அவர் கூறினார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X