2025 மே 02, வெள்ளிக்கிழமை

நுளம்புப்பொறி கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


டெங்கு மற்றும் நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், நுளம்புகள் பரவுவதைக்  கட்டுப்படுத்தும் வகையில் நுளம்புப்பொறி ஒன்றை மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த சோமசூரியம் திருமாறன் கண்டுபிடித்துள்ளார்.

தான் கண்டுபிடித்த நுளம்புப்பொறி பற்றியும்; அதன் செயற்பாடுகள் பற்றியும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் சோமசூரியம் திருமாறன் தெரிவித்தார்.

வெற்று தண்ணீர் போத்தல்களைக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ள இந்த நுளம்புப்பொறி,   மிகவும் செலவு குறைந்ததும் வீடுகளில் பாவிக்கக்கூடியதுமாகும்.  இதன் மூலம் நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தமுடியும் எனவும் அவர் கூறினர்.

புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரான சோமசூரியம் திருமாறன் குண்டசாலையில் விவசாய டிப்ளோமா பெற்றவர் ஆவார். இயற்கை முறையான ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை செயற்படுத்தி வரும் இவர், இது போன்ற பல்வேறு தொழில்நுட்ப ரீதியான உபகரணங்களை செய்து பயன்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X