2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலகத்துக்கு புதிய செயலாளர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட  மாணிக்கவாசகம் தயாபரன் இன்று திங்கட்கிழமை (14)  தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியும் லண்டன் பல்கலைக்கழக மனிதவள அபிவிருத்தி பட்டதாரியும் ஆவார். மேலும், இவர் இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்தவர். பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர், மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புத்திட்ட முகாமையாளர் ஆகிய  பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

மேற்படி பிரதேச செயலகத்துக்கான பிரதேச செயலாளராக ஏற்கெனவே இருந்த யூ.உதயஸ்ரீதர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தரவுக்கு இணங்க, மாவட்ட செயலகத்துக்கு மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். இதனை  அடுத்து ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக தயாபரன் கடமையை பொறுப்பேற்றுள்ளார். 

இது இவ்வாறிருக்க, யூ.உதயஸ்ரீதரின் இடமாற்றத்தை இரத்துச்; செய்யுமாறு கோரி செங்கலடிப் பிரதேசத்தில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றதுடன், கடை அடைப்புக்களும் முன்னெடுக்கப்பட்டன.
 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X