2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 14 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்தசபை ஆணைக்குழுவினால் மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் முகமாக  பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் மத்தியஸ்த சபைகளை அமைத்து வருகின்றது.

அந்த வகையில், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான 221ஆவது மத்தியஸ்தசபை  மத்தியஸ்தசபை ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டது.  இதற்காக 27 பேர் நியமிக்கப்பட்டு   அவர்களுக்கான  நியமனக் கடிதங்களை மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் தவிசாளர் ஹெக்ரர் யாபா இன்று திங்கட்கிழமை வழங்கிவைத்துள்ளார்.

இதன்போது தவிசாளர், உதவித் தவிசாளர் உட்பட 27 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தவிசாளர் சீ.லோகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ரீ.தினேஸ் கலந்து கொண்டார். அதிதிகளாக பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், கணக்காளர்  ஏ.டிலானி, கல்குடா தபால் நிலைய தபால் அதிபர் எம்.அற்புதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Monday, 14 July 2014 02:09 PM

    உண்மையில் வாழைச்சேனை இணக்க சபை சாியாக,முறையாகச் செயற்படுகின்றது...வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X