2025 மே 02, வெள்ளிக்கிழமை

தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

Kanagaraj   / 2014 ஜூலை 14 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வடிச்சல் குளத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக,  தோணி  கவிழ்ந்து குடும்பஸ்தரொருவர் இன்று (14) மாலை  பலியாகியதாக  கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த தமிழ்ப்பிரிவு வாசியான  நாதன் என்றழைக்கப்படும் குலராசா சிவராசா (வயது 36) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஏறாவூரிலுள்ள மர அரிவு ஆலை ஒன்றில் வேலை செய்யும் நாதனும் அவரது  நண்பர்கள் மூவரும் வடிச்சல் குளத்தைக் கடப்பதற்காக தோணியில் சென்று கொண்டிருக்கும் போது வீசிய பலத்த எதிர்காற்று காரணமாக தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது தோணியிலிருந்து தவறி குளத்தில் விழுந்த நாதன் சேற்றில் புதைந்துள்ளார். மற்றய  இருவரும் குளத்தில் தத்தளித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒன்பது பேர் கொண்ட சுழியோடிகள் மற்றும் மீட்புக் குழுவினருடன் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்து  மற்றய இருவரையும் கரை சேர்த்ததாக, மீட்பு பொலிஸ் அணியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம். றினாஸ் தெரிவித்தார்.

சடலம்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X