2025 மே 02, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திகளுக்காக நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 15 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை, காங்கேயனோடை, ஒள்ளிக்குளம், மஞ்சந்தொடுவாய் ஆகிய கிராமங்களில்; 30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இந்த வருடம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

இந்த நிலையில், சுயதொழில்; திட்டங்களுக்காக 14 இலட்சத்து 33,000 ரூபாவையும் கலாசார மற்றும் விளையாட்டு அபிவிருத்திகளுக்காக  710,500 ரூபாவையும் சமூக உட்கட்டுமான அபிவிருத்திகளுக்காக 656,500 ரூபாவையும்  உட்கட்டமைப்பு வேலைகளுக்காக 200,000 ரூபாவையும்; ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிதியொதுக்கீட்டின் மூலம்; 12 சுயதொழில் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளதுடன், 15 கலாசார மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திட்டங்களும் 14 சமூக உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களும் ஒரு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி அபிவிருத்தித் திட்டங்களுக்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் 30 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X