2025 மே 02, வெள்ளிக்கிழமை

கலைப் பிரிவு மாணவர்களுக்கு இலவச செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 15 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரபீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலைப் பிரிவு மாணவர்களுக்கு இலவச செயலமர்வுகள் நடத்தப்படவுள்ளன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் நடத்தப்படவுள்ள இச்செயலமர்வுகள் எதிர்வரும் 16.07.2014 தொடக்கம் 25.07.2014 வரை கிழக்கு பல்கலைக்கழக நல்லையா ஞபகார்த்த மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.

பாடங்களுக்கான செயலமர்வுகள் முறையே,

16.07.2014  - புவியியல், 17.07.2014  - நாடக அரங்கியல், 18.07.2014  - அரசியல் விஞ்ஞானம், 21.07.2014  - தமிழ், 22.07.2014  - அளவையியல், 24.07.2014  - பொருளியல், 25.08.2014  - இந்துநாகரிகம் ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரபீட மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் கட்டாயம் பாடசாலைச் சீருடையுடன் சமூகம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:  பு.மணிவண்ணன் - 0774927286,  வ.நிரோசன் - 0773521838 ஆகியோரை தொடர்புகொள்ள முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X