2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இமாம்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்: ஹிஸ்புல்லஹ்

Kogilavani   / 2014 ஜூலை 15 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


“பள்ளிவாயல்களின் இமாம்கள் மற்றும் கதீப்மார்களின் வருமானங்களை அதிகரிக்க எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என பொருளாதா அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை(15) இடம்பெற்ற உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியைமச்சர்,

“ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாயல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களின் மாத வருமானம் குறைவானதாகும். அதனால் அவர்களின் வருமானம் அதிகரிக்கப்படல் வேண்டும். அதற்காக பள்ளிவாயல்களின் வருமானங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

பள்ளிவாயல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் கதீப்மார், முஅத்தீன்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றவர்கள்.
பள்ளிவாயல்களுக்கு வருமானத்தை தேடும் வழிவகைகள் பற்றி ஆராய்ந்து அதன் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

காத்தான்குடியில் கதீப்மார்களை மற்றும் இமாம்களை உள்ளடக்கி சம்மேளனமொன்று செயற்படுவது பாராட்டத்தக்கதாகும். இவர்களுக்கு நிதியமொன்றை ஆரம்பிப்பதற்காக நான் என்னால் முடிந்தளவு உதவிகளை வழங்கியுள்ளேன்.

எதிர்காலத்திலும் இந்த நிறுவனத்திற்கு என்னாலான உதவிகளை வழங்குவேன். இவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டமொன்றை உருவாக்கி அவர்களை மேம்படுத்த வேண்டும்.
 
எனது வேண்டுகோளின் பேரில் சவூதி அரேபியாவிலுள்ள றாபியா நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் இந்த உலர் உணவுப் பொருட்களை வழங்குகின்றது.

இலங்கையிலுள்ள வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் 6000 பேருக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்த வைபவத்தில் காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை, அதன் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, றாபியா நிறுவனத்தின் பிரதிநிதி உட்பட பள்ளிவாயல் சம்மேளன பிரதிநதிகள், உலமாக்கள் கதீப்மார் கலந்து கொண்டனர்.
இதன்போது 300 பேருக்கு தலா ஒருவருக்கு 4000 ரூபா பெறுமதியான உலர் பொருட்கள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X