2025 மே 02, வெள்ளிக்கிழமை

உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

Super User   / 2014 ஜூலை 15 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு - தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையில் பட்டிப்பளைப் பிரதேச ஒளிக்கல்லூரி அமைப்பின் ஏற்பாட்டின் கீழ், 2014இல் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வருடம் உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, கொக்கட்டிச்சோலை மற்றும் நாவற்காடு ஆகிய இரு நிலையங்களிலும் பாண்டித்தியம் பெற்ற வளவாளர்களைக் கொண்டு இவ்விலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கினை புதன் கிழமை (16) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை நடாத்தவுள்ளது.

இதன்போது தமிழ், இந்துநாகரீகம், நாடகமும் அரங்கியலும், விவசாயம்,  சித்திரம், அளவையியல், அரசறிவியல், ஆகிய பாடங்களுக்கு உரிய கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

இக்கருத்தரங்கிற்கு  மட்டக்களப்பு மேற்கு கல்வி  வலயத்திற்குட்பட்ட அனைத்து உயர்தர மாணவர்களையும் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிலயத்தில் கலந்து கொள்ளுமாறு பட்டிப்ளைப் பிரதேச ஒளிக்கல்லூரி அமைப்பு வேண்டுகோழ் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X