2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தொடையை பதம்பார்த்த அலவாங்கு

Super User   / 2014 ஜூலை 15 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், எஸ். ரவீந்திரன்


அறுவடை செய்யும் இயந்திரமொன்றிலிருந்து கீழே இறங்கிய போது ஒருவருடைய தொடைப் பகுதியில் அலவாங்கு ஏறிய சம்மபவம் வெல்லாவெளியிலுள்ள வயல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் (15) இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் தெரிவித்தார்.

அறுவடை செய்யும்; இயந்திர உதவியாளராக கடமைபுரியும் சோமசுந்தரம் ரகுநந்தன்(வயது 21) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர் அறுவடையை முடித்துவிட்டு கீழே பாய்ந்து இறங்கியபோது வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலவாங்கு இவரின் தொடைப்பகுதியில் ஏறியுள்ளது.

இவரின் தொடடைப்பகுதிலிருந்து நெஞ்சுப்பகுதிவரை சுமார் ஒன்றரை தொடக்கம் இரண்டு அடிவரை அலவாங்கு ஏறியுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார். 

குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X