2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'கமநெகும' திட்டத்தின் கீழ் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம அலுவலகர் பிரிவுகளிலும்  முன்னெடுக்கப்படவுள்ளதாக அப்பிரதேச செயலக திட்டமிடல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்துக்காக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 180 இலட்சம் ரூபாய் நிதியை  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சிபாரிசுடன் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான திட்டங்கள் மக்களின் முன்மொழிவுகளுடன் பெறப்பட்டுள்ளன.  இதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 16 கிராமங்களில் வீதி அபிவிருத்திகளும் 02  கிராமங்களில் வடிகான் நிர்மாணங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வேலைத்திட்டம்  10 இலட்சம் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X