2025 மே 03, சனிக்கிழமை

சிறுபோக நெல் அறுவடை விழா

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல்-சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் கமநல கேந்திர நிலையம் ஏற்பாடு செய்திருந்த சிறுபோக நெல் அறுவடை விழா ஆனைகட்டியவெளி வயற் கண்டத்தில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என். சிவலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், மீள் குடியேற்றப் பிரதிய அமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண விவசாயத்தி திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய உதவிப் பணிப்பாளர், ஆர் கோகுலதாசன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், மீள் குடியேற்றப் பிரதிய அமைச்சரின் இணைப்பச் செயலாளர்கள், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பிரதேசத்தில் 2,000 ஏக்கர் வயல் நிலத்தில் சட்டரீதியான நீர்ப்பாசனம் இல்லாமல் ஆற்றலிருந்து மேலதிகமாக வெளியேறும் நீரைப் பயன்படுத்தி சிறுபோக வேளாண்மை செய்கை பண்ணப் பட்டுள்ளதாக மண்டூர் கமநல கேந்திர நிலையம் தெரிவிக்கின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X