2025 மே 03, சனிக்கிழமை

உள்ளூராட்சி சபைகளை முன்னேற்றுவதும் முக்கியமானதாகும்: அதாவுல்லா

Gavitha   / 2014 ஜூலை 22 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


உள்ளூராட்சி சபைகள் மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் உள்ளூராட்சி சபைகளை முன்னேற்றுவதும் முக்கியமானதாகும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்தார்.

 மட்டக்களப்பு சிவில் அமைப்புக்கும் உள்ளூராட்சி மாகாண சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (20) மருதமுனை அல் மனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையியையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையையும் (களுவாஞ்சிக்குடி) நகர சபைகளாக மாற்றும் விடயத்தில் ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் குறித்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இந்நடவடிக்கையில் இவ்விடயங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டும்.

அத்துடன் எமது தமிழ் முஸ்லிம் மக்கள் சமூக ஒற்றுமை சார்ந்து புரிந்துணர்வுடன் செயற்படுவது இந்தக் காலகட்டத்தில் அவசியமானதாகும். இதற்கான புரிந்துணர்வு நம்மத்தியில் உருவாகவேண்டும் என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் அபிவிருத்தி மேம்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான பங்களிப்புக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையையும் நகர சபைகளாக மாற்றுவதற்கான வேண்டுகோள் சிவில் சமூகத்தினரால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.

அதே நேரம், தமிழ் முஸ்லிம் மக்களது சமூக ஒருமைப்பாடு, ஒற்றுமை ஒன்றிணைந்த செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X