2025 மே 03, சனிக்கிழமை

செலான் வங்கியின் விரிவாக்கல் நிலையம் திறப்பு விழா

Gavitha   / 2014 ஜூலை 22 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் - களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள செலான் வங்கியின் விரிவாக்கல் நிலையம் திங்கட்கிழமை (21) களுவாஞ்சிகுடி நவீன் கிளையாக தரமுயர்த்தப்பட்டு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செலான் வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை முகாமையாளர் அமலேஸ்-ஜோசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வங்கித் திறப்பு விழா நிகழ்வில், செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி பத்மராஜ - நிரஞ்சன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வங்கியினைத் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் செலான் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் சிவஞானி முற்றறீஸ, களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி கயான், மற்றும் மதப் பெரியார்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய செலான் வங்கிகளின் முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

களுவாஞ்சிகுடியில் அமைக்கப்பட்டுள்ள செலான் வங்கிக்கிளை இலங்கையில் 130வது செலான் வங்கிக் கிளை எனவும், செவ்வாய்கிழமை மாத்திரம் இலங்கையில் 10 செலான் வங்கிக் கிளைகள் திறந்து வைக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி கிளை முகாமையாளர் தெரிவத்தார்
மேலும் இந்த வருடத்திற்குள் இலங்கையில் 200 செலான் வங்கிக் கிளைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X