2025 மே 03, சனிக்கிழமை

காத்தான்குடியில் எழுவருக்கு டெங்கு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் கடந்த 02 வாரங்களில் 07 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22)  நடைபெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

காத்தான்குடியில் டெங்கு கட்டுப்பாட்டிலிருந்தபோதிலும், கடந்த 02  வாரங்களில் 07 பேருக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடியிலுள்ள றிஸ்வி நகர், விடுதி வீதி போன்ற பகுதிகளில் டெங்கு ஏற்பட்டுள்ளதாகவும்; அவர் கூறினார்.

டெங்கு ஏற்படாமல் சமூகத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். டெங்குக்கு எதிராக அனைவரும் சகல சந்தர்ப்பங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டும்.

வீடுகளிலுள்ள  நீர்த்தாங்கிகள் மற்றும் கிணறுகளில்  டெங்கு நுளம்புக்குடம்பிகள் உருவாகுவதுடன்,  இவற்றிலிருந்து டெங்கு நுளம்புகளும் பரவும். இந்நிலையில்,  இந்த இடங்களை மூடி வைப்பது அவசியமெனவும் அவர் கூறினார்.

சுற்றுப்புறச்சூழல், வீடுகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  மேலும், டெங்கு விடயத்தில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். சமூகத்தை டெங்கிலிருந்து பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X