2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையின் அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை சனிக்கிழமை (02)  பட்டிருப்பு தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயம் தலைமையில், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜனின் ஏற்பாட்டின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 67 பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X