2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

வீட்டு முற்றத்தில் மனித மண்டையோடு: சந்தேகத்தில் கணவர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் உள்ள வீட்டு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நள்ளிரவு வேளை மண்டையோட்டை வீசியவர், தாபரிப்பு வழக்குக் கோரியுள்ள தனது கணவர் என மனைவி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
 
தனது வீட்டு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை (04) காலை காணப்பட்ட மந்திரித்த பொருட்கள் அடங்கிய பொதியை தான் கண்டெடுத்து எரித்த போது அதனுள் மண்டையோடு காணப்பட்டதாக பாக்கியராசா வசந்தா (வயது 38) எனும் குடும்பப் பெண் ஏறாவூர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

சம்பவத்திற்கு முந்திய தினமான ஞாயிறு இரவு 10.45 இற்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தனது வாசலில் பொதியொன்று வீசப்பட்டதைத் தான் கண்டதாகவும் இது பில்லி சூனியம் நிறைந்த மந்திரித்த பொதியாக இருக்கலாம் எனக் கருதி தான் வீட்டுக்கு வெளியில் வந்து பார்க்காது காலையிலேயே வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக பிரிந்து வாழும் அந்தப் பெண்ணினால் தாபரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள கணவரான பாக்கியராஜா வினோத் (வயது 46) என்பவரை ஏறாவூர் பொலிஸார்; கைது செய்துள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களாக கணவனைப் பிரிந்து வாழும் இந்தப் பெண் கணவனுக்கெதிராக தாபரிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸாரிடம் கூறினார்.

அதனால் கணவரே தனக்கெதிராக தொடர்ந்து வேண்டத்தகாத கருமங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் சமீபகாலமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறி ஜெப ஆராதனைகளில் ஈடுபட்டுபட்டு வருவதாகவும் அதனால் தனக்கு பலவகையான கெடுபிடிகளும் தொல்லைகளும் இழைக்கப்பட்டு வருவதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறினார்.

இதற்கு முன்னரும் தனது வீட்டு முற்றத்தில் மந்திரித்துப் போடப்பட்ட பழங்கள், பூக்கள் என்பனவற்றைத் தான் கண்டெடுத்து எரித்துள்ளதாகவும் அவர் வாக்குமூலமளித்தார்.

இது தொடர்பாக பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ள பொலிஸார் மனித மண்டையோடு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது பற்றி விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X