2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

டெங்கு கட்டுப்பாட்டு குழு அமைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு தடுப்புப் பிரிவின் ஆலோசனைக்கு அமைவாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் பிரதேச மட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் வியாழக்கிழமை (7) தெரிவித்தார்.

21 பேர் கொண்ட இக்குழுவில் கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை அதிகாரிகள், பள்ளி வாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஊடகவியலாளர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பிரதேச மட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் கூட்டிணைந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X