2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குரங்குத் தொல்லை அதிகரிப்பு: மக்கள் விசனம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மீறாவோடை ஆற்றுப் பகுதியில் இருந்து மீறாவோடை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகும் குரங்குகள் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, வாகன கண்ணாடி, தொலைக்காட்சி பெட்டி போன்ற பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

இது தொடர்பாக இப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், திடீர் என்று ஆற்றுப் பகுதியில் இருந்து வரும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதாகவும் இதனால் பயத்தில் சிறுவர்கள் பயப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்கின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்புப் பெற்றுத் தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X