2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'பௌர்ணமி இரவு ஒன்று கூடல் நிலாமுற்றத்தில் நிம்மதி காண்போம்'

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'நெருக்கடியான வாழ்க்கைப் பயணத்தில் ஒருமுறை நின்று நிதானித்து அழகிய குடும்ப வாழ்வினை வலுப்படுத்துவோம். பௌர்ணமி இரவில் நிலா முற்றத்தில் நிம்மதி காண்போம்' எனும் தொனிப்பொருளில் நிலாமுற்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதாக வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவின் பணிப்பாளர் அடிகளார் போல் சற்குணநாயகம் தெரிவித்தார்.

இந்நிகழ்வு 9 (சனிக்கிழமை) மாலை 06:30 முதல் இரவு 09:00 மணி வரை மட்டக்களப்பு மன்றேசா வீதியிலுள்ள வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப்பூங்காவில் இடம்பெறவுள்ளது.

மாதாந்தம் ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவின் சிறார் கலைஞர்  ரீ.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
குடும்பத்துடன் வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவுக்கு மாதம் ஒருமுறை வருகை தருவதன் மூலம் பிள்ளைச் செல்வங்களின் திறனை வலுவூட்டுவதோடு மாலை நேர உணவில் பங்குகொண்டு பூங்கா சிறார்களுக்கு உதவிசெய்து உபகாரியாகவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

பௌர்ணமி நிலா நிகழ்வில் சிறார்கள் வெளிப்படுத்தும் ஆடல், பாடல் திறன்கள் வெண்திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறார்களுக்கான வளப்படுத்தல் கலைச் செயற்பாடுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் சுவையான கிராமத்து உணவுகளும், சிற்றுண்டிச்சாலை வசதிகளும் பௌர்ணமி இரவு ஒன்று கூடல் நிலாமுற்ற நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவின் சிறார் கலைஞர்  ரீ.நகுலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X