2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலையின் அவல நிலை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு  முன்பாகவுள்ள  பழைய பொது நூலக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள  தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது சிலையின் தற்போதைய நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் ஜனன தினத்தினை முன்னிட்டு அடிகளாரின் உருவச்சிலை கடந்த வருடம் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டிலும் மன்னார் நகர சபையின் அனுசரனையுடனும் மன்னார் பழைய பொது நூலக வளாகத்தினுள் அமைக்கப்பட்டது.

இச்சிலையானது அடிகளார் தமிழ் அன்னைக்கு ஆற்றிய பணியினை சமகால மக்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்தியம்பும் வகையில் அமைக்கப்பட்டது.

இருப்பினும் இச்சிலை நிறுவப்பட்ட  நாளிலிருந்து இன்று வரை கவனிப்பாரற்று பறவைகள் வந்து இளைப்பாறி செல்லும் இடமாக தற்போது  காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

 மன்னார் நகருக்குள் வரும் மக்கள் அனைவரினதும் பார்வையில் படக்கூடிய அமைவிடத்தில் அமைந்துள்ள அடிகளாரது சிலையினை நோக்கும் போது, அவரை கௌரவப்படுத்துவதக்கு அல்ல, அவமதிப்பதற்காக நிறுவப்பட்டது போல் இன்று வரை காட்சியளிக்கின்றது என கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட தரப்பினர் அவரது உருவச்சிலையினை உற்று நோக்கி பொதுமக்கள் பார்த்து மரியாதை செலுத்தும் வண்ணம் பராமரிக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X