2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதிகளைச் செப்பணிடும் பணிகள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட  பகுதிகளில் சேதமடைந்து காணப்பட்ட  வீதிகளைச் செப்பணிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு நிலுவையாகவுள்ள வரிப்பணங்கள் அறவிட்டதன் பின்னர் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்பட்ட வீதிகளை செப்பணிடும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

210 அடி நீளமும் 12 அடி அகலமும் உடைய பாரதி வீதி முதலாம் குறுக்கு 1.4 மில்லியன் ரூபாய்  செலவில் மாநகரசபை ஊழியர்களைக் கொண்டு நேற்று வியாழக்கிழமை செப்பணிட்டதாகவும் அவர் கூறினார்.

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க   மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த நிலையில்  உள்ள வீதிகள், பூங்காக்கள் மற்றும் மைதானங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

நொச்சிமுனையில் உள்ள சாரதா வீதி, அமிர்தகழியில் உள்ள  கண்ணகையம்மன் கோவில் வீதி, நகரில் உள்ள கிறீன் வீதி என்பன ஏற்கெனவெ செப்பணிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X