2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறு கைத்தொழிலாளர்களுக்கு செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கைத்தொழில் அதிகாரசபையால் சிறு கைத்தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகங்கள் தோறும் செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, ஏறாவூர் நகர், கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 85 சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு வாழைச்சேனை வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரு நாள் செயலமர்வு நடைபெற்றது.

கைத்தொழில் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.எம்.ரணவீர தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் வளவாளர்களாக தொழில் திணைக்கள அதிகாரிகளும் கைத்தொழில் அதிகாரசபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X