2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இஸ்ரேலிய உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறு ஏறாவூரில் பிரசாரம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இஸ்ரேலிய நாட்டினதும் யூதர்களினதும் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஏறாவூர் நகரில் பிரசாரம் செய்யப்படுகின்றது.

ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரத்தின் ஓரங்கமாக நகரெங்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

'யூதப் பயங்கரவாதிகளின் உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிப்போம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 'அன்பார்ந்த நெஞ்சங்களே! இஸ்லாமிய பெருமக்களே!

பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் சஹீதாக்கப்பட்ட மற்றும் காயமடைந்து போதிய வைத்திய வசதியின்றி அவதியுறும் எமது உறவுகளுக்காக தொடர்ந்தும் நாம் பிரார்த்திப்போம். எமது இஸ்லாமிய அப்பாவிச்  சகோதரர்களின் இரத்தத்தையும் மாமிசத்தையும் புசிக்கத் துடிக்கும் யூதர்கள் அல்லாஹ்வின்   சாபத்திற்குள்ளானவர்கள்.

இஸ்ரேலிய யூதப் படைகள்  பாலஸ்தீன மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இறை இல்லங்களுக்கும்  ஏற்படுத்திய பேரழிவுகளை மனித நேயமிக்க எந்த உள்ளமும் மன்னிக்காது.

இவ்வாறான யூதர்களுக்கு நிதி சேர்க்கும் வர்த்தக நிறுவனங்களின் பெரும்பாலான உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாக காஸாவில் ஆயிரக்கணக்கில்  பொதுமக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து ஈனச்செயலை புரிந்துகொண்டிருக்கும் யூதர்களுக்கு நாமும் பொருளாதார ரீதியில் மறைமுகமாக உதவுகின்றோம் என்பதை எமது சமூகம் மறந்து செயற்படுகின்றது.

யூதர்களின் உற்பத்திப் பொருட்களை நாம் பாவிக்காது பகிஷ்கரிப்பதன் மூலமாக அவர்களுக்குச் சென்றடையும் பொருளாதார ரீதியான உதவிகளை எம்மாலும் தடுக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என துண்டுப்பிரசுரங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X