2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிரஜைகள் சபை அமைப்பதற்கான கூட்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பினால் பிரஜைகள் சபை அமைக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரஜைகள் சபை அமைப்பது தொடர்பான தெளிவுப்படுத்தும்  கூட்டம் வெள்ளிக்கிழமை(8) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்டமுகாமையாளர் வி.றமேஸ் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டத்தரணி லயனல் குருகே உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

சிங்கள, தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே ஐக்கியத்தையும், நல்லுறவையும் கட்டியெழுப்ப இந்த பிரஜைகள் சபை அமைக்கப்பட்டு வருகின்றன.

சமூகத்தின் பால் நலன்கொண்டுள்ள அனைத்து அமைப்புகளின் பிரதிநிகளின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டே இந்த பிரஜைகள் சபை  அமைக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X