2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சா கடத்திய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது.

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கஞ்சாவைக் கடத்தி வந்து அதனை இன்னொருவருக்கு கைமாற்றிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை சாய்ந்தமருது வரவேற்புத் தோரணத்தடியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை 08.08.2014 அதிகாலை நாலரை மணியளவில் தாங்கள் கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவர் வசமிருந்த 1876 கிராம் கஞ்சாவை இன்னொருவருக்கு கைமாற்றும்போது தாங்கள் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி அப்துல் கப்பார் தலைமையிலான பொலிஸ் பரிசோதகர் அப்துல் வாஹித், உப பொலிஸ் பரிசோதகர் ஏ. அனுஜன், பொலிஸ் கான்ஸ்டபிள்களான எஸ். அப்துல் ஜவாத் (7138), டபிள்யூ. சமிந்த தென்னகோன் 70116 ஆகியோரைக் கொண்ட குழுவினர் இந்த கஞ்சா கடத்தல் நபரைக் கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துவருகின்றனர்.

குறித்த நபர் ஏற்கெனவேயும் கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்டதன் காரணமாகவே குற்றவாளியாகக் காணப்பட்டு பொலிஸ் கடமையிலிருந்து நீக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X