2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மருத்துவ சங்கத்தின் வருடாந்த ஓன்று கூடல் நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 'புற்றுநோயைக் குணமாக்கும் சகல அம்சங்களும் உள்ளடக்கிய மருத்துவம்' எனும் தொனிப்பொருளின் கீழ் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது.

மட்டக்களப்பு மருத்தவ சங்கத்தின் தலைவர் ஏ. பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவ நிலையத்தின் சிரேஷ்ட சத்திரசிகிட்சை நிபுணர் இந்திராணி அமரசிங்க, சிரேஷ்ட வைத்திய நிபுணர் ஜெயந்த பாலவர்த்தன மற்றும் முன்னால் பிரதி சபாநாயகரும் மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியின் முன்நாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர்  ஆகியோர் மருத்துவ சங்கத்தின் நிர்வாகத்தினருக்கான நினைவுச் சின்னங்களை வழங்கிக் கௌரவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X