2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கைகுண்டு மீட்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன் ,எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடை பகுதியில் கைக்குண்டொன்றினை சனிக்கிழமை (09) மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 மீறாவோடையைச் சேர்ந்த அப்துள் மஜீத் என்பவரது வீட்டிலிருந்தே M4 ரக கைக்குண்டு  மீட்க்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் வளவினை சுத்தம் செய்யும் பணியில் திருமதி அப்துள் மஜீத் ஈடுபட்டிருந்த போது, வீட்டின் அத்திவார பின்புற பகுதியில் மர்மப் பொருளொன்று தகரப் பேனியினுள் அடைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானித்துள்ளார்.

குறித்த பொருள் என்னவென்று பார்பதற்காக தகரப்பேனியினை உடைத்துப் பார்த்த பொழுது வெடிப் பொருள் என அறிந்து வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் தகவல் வழங்கியுள்ளார்.

 குறித்த இடத்திற்கு சென்று பொலிஸார்  பார்வையிட்டதுடன், கைகுண்டை அகற்றுவதற்காக குண்டு செயளிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியினை நாடியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X