2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினரின் இரத்ததான நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கல்லடி 231ஆவது பிரிவு இராணுவத்தினரால் இரத்தானம் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (09) இராணுவ முகாமில் நடைபெற்றது.

மாவட்டத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களில் 75 வீதமாக மக்களுக்கு தலசீமியா நோய்த் தாக்கம் காணப்படுவதன் காரணமாக இரத்த தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

இரத்த வங்கியின் பொறுப்பாளரான வைத்தியக் கலாநிதி உபேந்திர வாரியபொல தலைமையில் தாதிமார்கள், 175 படையினரிடமிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X