2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்து: வயோதிபர் பலி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,க.ருத்திரன்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ரி. புவனேஸ்வரன் (வயது 56) என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தவராவர். தற்போது சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் அவ்வழியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வயோதிபர் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்து மயக்கமுற்ற நிலையில் முதலில் பெரிய கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X