2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விசேட கல்விக் கருத்தரங்கு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச சபையின் மூலம் இம்முறை  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு விசேட கல்விக் கருத்தரங்கு திக்கோடை கணேச வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக் கிழமை (08) நடைபெற்றது.

திக்கோடை பொது நூலக வாசகர் வட்டத்தின் ஆரதவுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், திக்கோடை கணேச வித்தியாலயம், மண்டூர் 39 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இளைஞர் விவசாயத்திட்டம் வெள்ளிமலைப் பிள்ளையார் வித்தியாலம், ஆகிய பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களுக்கு மாதிரி வினாப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச சபையின்  செயலாளர் எஸ். குபேரனின் தலைமையில் நடைபெற்ற இந்நகழ்வில் சனசமூக உத்தியோகஸ்தர் ம.கருணாநிதி, மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வாசகர் வட்டத்தினர் என பலரும் இணைந்திருந்தனர்.  
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X