2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இளநீர் பறிக்க மரத்தில் ஏறியவர் விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கிரான் பிரதேசத்தில் இளநீர் பறிக்கும் முகமாக தென்னை மரத்தில் ஏறிய வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த ஆறுமுகம் கண்ணன் (வயது 19) என்பவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை (09) மாலை வாகனேரியிலிருந்து பொண்டுகள்சேனை கிரானிலுள்ள உறவினர்கள் வீட்டுக்கு தனது  நண்பர்களுடன்  இவர் சென்ற வேளையில், இளநீர் குடிப்பதற்காக மரத்தில் ஏறியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X