2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இலவச கணினி பயிற்சி நெறி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் பெண்களுக்கான இலவச கணினி பயிற்சி நெறி இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா இந்த பயிற்சி நெறியை ஆரம்பித்த வைத்தார்.

மேற்படி  அமைப்பின் பெண்களுக்கான தகவல் தொழிநுட்ப அறிவு மற்றும் கணினி அறிவு என்பவற்றை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவச கணினி பயிற்சி நெறி காத்தான்குடியிலுள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த பயிற்சி நெறியில் 35 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர் இது 3 மாதங்களுக்கு நடைபெறுமென பெண்களுக்கான நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

இப் பயிற்சி நெறியில் மேற்படி வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X