2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முதலாம் ஆண்டு நிறைவு விழா

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


சங்காரவேல் பவுண்டேசன் புலமைப்பரிசில் திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வும் மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.

சங்காரவேல் பவுண்டேசனின் தலைவர் ஓய்வுநிலை விஞ்ஞானக்கல்வி, உதவிக்கல்விப் பணிப்பாளர் சோ.சிவலிங்கம் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்புகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தங்களுக்கு விருப்பமான, பொருத்தமான துறைகளில் கல்வி பயில பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்காக இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தில் இதுவரை 29 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புலமைப்பரிசில் உதவிகள் உயர்தரக் கல்வி நிறைவடையும் வரை வழங்கப்படும் வருகின்றன.

அந்த வகையில் சங்காரவேல் பவுண்டேசனின் ஒருவருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடல் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு பட்டிருப்பு வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், இந்நிதியத்தின் ஸ்தாபகர் அமரர் சங்காரவேலின் மனைவி, நிதியாளரான அவரது மகன் ச.சுகுமாரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட ச.சுகுமாரன் மற்றும் அவரது குடும்பத்தினருடைய முயற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான, கணிதப்பிரிவுகளில் கற்க வசதியற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு நிதி வசதிகள், ஏனைய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இந்த புலமைப்பரிசில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அத்துடன், வசதியற்ற மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக  துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிதியுதவிகள் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய, வசதிகுறைந்த நிலையிலுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வி; வளர்ச்சியும் விருத்தியடையும் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X