2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஊடக சுதந்திரம் இல்லை: மட்டு. மறைமாவட்ட ஆயர்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தற்போது இலங்கையில்  ஊடக சுதந்திரம் இல்லை என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை  (09) நடைபெற்ற உலக தொடர்பு தின  நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எமது நாட்டில் தற்போது ஊடக சுதந்திரம் இல்லை. ஊடக சுதந்திரம் முக்கியமானாதாகும். அனைவருக்கும் கருத்துக் கூறுகின்ற சுதந்திரம் உண்டு. ஆனால் இங்கு ஊடகவியலாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ சுதந்திரமாகச் செயற்பட முடியாதுள்ளது.

தற்போது  தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகை ஆக்கிரமித்துள்ளன. இணையத்தளங்கள் மற்றும் கைபேசிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவைகள் தற்போது செல்வாக்குச் செலுத்துகின்றன.

ஊடகங்களினால் நன்மை உள்ளது. அதேபோன்று தீமையும் ஏற்படுகின்றது. உலகில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அதே நிமிடத்தில் நாங்கள் அறிந்துகொள்கின்றோம்.

உக்ரைன் நாட்டில் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை ஐந்து நிமிடங்களில் அறிந்துகொள்ள முடிகின்றது. இதேபோன்று அவ்விடத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்கின்றோம்.

மேலும், இன்று தொலைக்காட்சி நாடகங்களினால் பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. பலரின் திருமண வாழ்க்கை சீர்குலைவதற்கு இந்த தொலைக்காட்சி நாடகங்கள் காரணமாக உள்ளன. அத்தோடு பாடசாலை மாணவர்கள் கைபேசிகள் பயன்படுத்துவதால் மாணவர்களும் இதன் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.

கருத்துச் சுதந்திரமும் ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரமும் ஊடகங்களுக்கான சுதந்திரமும் இருக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X