2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மு.காங்கிரஸின் காத்தான்குடிக்கான மத்தியகுழு தெரிவு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடிக்கான மத்திய குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவுசெய்யப்பட்டது.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி, காங்கேயனோடை, பாலமுனை, கீச்சான்பள்ளம், ஒள்ளிக்குளம், சிகரம், பூநொச்சிமுனை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மத்திய குழு தெரிவு முன்னெடுக்கப்பட்டது.

மத்திய குழுவின் தலைவராக - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன்

உப தலைவர்கள் - காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா, மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன், எம்.ஏ.றஹீம்

இணைச் செயலாளர்கள் - மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் என்,கே.றமழான்,  கவிஞர் எம்.சாந்திமுகைதீன்,
பொருளாளர் - காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை

உறுப்பினர்களாக 14 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதன் ஆலோசகர்களாக - அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத்,  கட்சியின் முக்கியஸ்தர் எம்.எஸ்.இஸ்ஸதீன்  தெரிவுசெய்யப்பட்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் காத்தான்குடியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலுவலகத்தில் நடைபெற்ற காத்தான்குடிக்கான மத்திய குழு தெரிவுக் கூட்டத்தில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா, முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் என்,கே.றமழான், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை, மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த மத்தியகுழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X