2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஒத்துழைக்க தயார்: சுபைர்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக  முழுமையான  ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி விக்ரமநாயக்காவை  ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் எம்.எஸ்.சுபைர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர்  மேற்கண்டவாறு  கூறினார்.

ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருளுடன் இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த போதைப்பொருள் பாவனையைத்  தடுக்க ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எடுத்த நடவடிக்கைக்காக எம்.எஸ்.சுபைர் இதன்போது  நன்றி தெரிவித்தார்.

அண்மைக்காலமாக ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தகவல் கிடைக்கின்றது. இதை ஒழிப்பதற்கு ஏறாவூர் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை தான் வழங்குவதாக எம்.எஸ்.சுபைர் கூறினார்.

பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மாணவர் சமூகத்தையும் இளைஞர் சமுதாயத்தையும் சமூகச் சீரழிவுகளிலிருந்து பாதுகாக்க முடியும்.
அத்துடன்,  இது தொடர்பாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஏறாவூர் ஜம்இய்யத்துல் உலமா ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்று போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை  ஏறாவூரில்  மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

போதைப்பொருள்; வியாபாரிகளை விரட்டியடிப்பதுடன், இவர்களை ஒருபோதும் யாரும் அனுமதிக்க முடியாது. இதற்காக ஏறாவூர் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பையும் தான் வழங்கத் தயார் எனவும் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X