2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


செங்கலடி பிரதேச செயலக பிரிவில் யுத்தத்தின் பின் மீள்குடியேற்றப்பட்ட, சர்வோதய நகர் மற்றும் கித்துள் கிராம வாசிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி. எஸ். எம். சாள்ஸ்சிடம் இன்று (11) கையளித்தனர்.

குறித்த மகஜரில் தாங்கள் முகம் கொடுக்கும் யானைப்பிரச்சினை, பாம்புக் கடி, மலசலகூட வசதியின்மை, வீட்டுவசதியின்மை, கல்வி, மற்றும் வாழ்வாதார வசதியின்மை போன்ற பிரச்சினைகளை உள்ளடக்கி, 100 பேர் கையொப்பமிட்டுள்ளாதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு ,யக்கத்தின் தலைவர் கே. செல்வகுமார் தெரிவித்தார்.

 மேலும் கித்துள், கரடியனாறு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் ,ணைந்து கையொப்பமிட்ட மகஜரின் பிரதிகளை ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர், ஜனாதிபதி செயலகம், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர், வீடமைப்பு அதிகார சபை மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு ,யக்கம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X