2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


இனங்களிடையிலான  நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ். சிங்கள மற்றும் முஸ்லிம் பெண் சாரணியர்கள் இணைந்து நடாத்திய சமூக அபிவிருத்தி விழிப்புணர்வு வேலைத்திட்டம் கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10)  இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பெண்கள் சாரணிய ஆளுநர் டிலாந்தி மோகனகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொழும்பு விதுறு வித்தியாலயம், கேட் வே  சர்வதேச பாடசாலை மற்றும் கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த  100 பெண் சாரணியர்கள் தமது பங்களிப்பை வழங்கினார்கள்.

கல்லடி வேலூர் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் போது, பாடசாலை மாணவர்களின் வீடுகளில் பூந்தோட்டங்களை பராமரித்தல், வீட்டையும் சூழலையும்  சுத்தமாக வைத்திருத்தல், சகிப்புத் தன்மையை வளர்த்தல், சவால்களுக்கு முகம் கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் திருமதி ரி.அருள்ஜோதி, பெண்கள் சாரணிய பணிப்பாளர் திருமதி ஜெயந்தி, மட்டக்களப்பு வலையக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X