2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சுயதொழில் முயற்சியாளர் ஊக்குவிப்பு பயிற்சிச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இளைஞர் விவகாரத்திறன் விருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியாளர் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ்  இம்மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சியாளர் ஊக்குவிப்பு பயிற்சிச் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது.

தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா, மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஜே.கலாராணி, நிஸ்கோ முகாமையாளர் ஏ.கிருபைராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வில் 35 இளைஞர், யுவதிகள் பங்குபற்றியுள்ளதாக மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஜே.கலாராணி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X