2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிறுவர் கண்காணிப்புக் குழுக்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.

இந்த நிலையில் சிறுவர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் பிளான் சிறிலங்கா  நிறுவனத்தால், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில்  நேற்று திங்கட்கிழமை (11) இதற்கான  செயலமர்வு நடத்தப்பட்டது.

முதற்கட்டமாக ஆயித்தியமலை வடக்கு, உன்னிச்சை, நெடியமடு, குறிஞ்சாமுனை, கரையாக்கன்தீவு ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளை தெரிவுசெய்து இந்தச் செயற்றிட்டம்  செயற்படுத்தப்படுகிறது.

இந்தச் செயலமர்வில் வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, பிளான் சிறிலங்கா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கே.வன்னிரமா, திட்ட உதவியாளர் ரி.லதா, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.பிரபாகரன், திவிநெகும அபிவிருத்தி அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுக்களின் செயற்றிறனை வலுப்படுத்தி, சிறுவர்களுக்குரிய உரிமைகள் மற்றும் சுதந்திரம்  சிறந்த முறையில் கிடைக்கும் வழிவகையை ஏற்படுத்திக்கொடுத்தல் எனும் நோக்குடன் இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டதாக பிளான் சிறிலங்கா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கே.வன்னிரமா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X