2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. வைத்தியசாலைக்கு ஆஸி. முறிவு வைத்தியர் விஜயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,
எஸ்.பாக்கியநாதன்

அவுஸ்திரேலிய நாட்டின் பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான டாக்டர் டேவிட் ஐங்கின் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (12) விஜயம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சுமார் 06 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் நிதியுதவியில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு கட்டடத்தை நிர்மாணிப்பது தொடர்பான  ஆலோசனைக் கூட்டத்திலும் இவர் கலந்துகொண்டார்.

இந்தக் கட்டடம் டாக்டர் டேவிட் ஐங்கின் நிதியுதவிடனும் அவரது  அனுசரணையுடனும் சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில்  வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்தக்; கூட்டத்தில் டாக்டர் டேவிட் ஐங்கின், பியப் அமைப்பின் முக்கியஸ்தரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வட்மோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கட்டட நிர்மாணத்துக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒருதொகுதி சத்திரசிகிச்சைக்கான உபகரணங்களை அவுஸ்தி;ரேலிய நாட்டின் பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான டாக்டர் டேவிட் ஐங்கின் இன்று செவ்வாய்க்கிழமை கையளித்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X