2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குடிநீருக்கான காசோலைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்    
  

காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த 300 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான காசோலைகள் நேற்று செவ்வாய்க்கிழமை (12) வழங்கப்பட்டன.

சமுர்த்தி நன்மை பெறும் இந்தக் குடும்பங்களில் தலா குடும்பத்துக்கு  5,450 ரூபாய் படி காசோலைகள் வழங்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியாலும் சிறிலங்கா ஹிறா புவண்டேசன் நிறுவனத்தால் சவூதி அரேபிய நாட்டு தனவந்தர்களின் உதவியுடன் இந்தக்  காசோலைகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு என  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில்,

'சுத்தமான குடிநீரை பருகுவதன் மூலம் பல நோய்த் தாக்கங்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.  இன்று எமது பிரதேசங்களில் கிணற்று நீர் மாசடைந்து காணப்படுகின்றது. கிணற்று நீரை பருகுவதன் மூலம் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகநோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், கிணற்று நீரை பருகுவதற்கு பயன்படுத்த முடியாது.

இதனால்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் 3,000 குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டுத் தனவந்தர்களின் நிதியுதவியுடன் குடிநீர் இணைப்பை பெறுவதற்கு உதவி வழங்கியுள்ளோம். இந்த உதவியானது நான் எடுத்துக்கொண்ட முயற்சியால் சிறிலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. இன்னும் மேலதிகமாக 300 பேருக்கு இன்று இதற்கான உதவி வழங்கப்படுகின்றது.

எமது வீடுகளுக்குள் அரசாங்கம் இவ்வாறான உதவிகளை தராது. பொதுவாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வாறான தனவந்தர்களின் உதவியைக் கொண்டு வீடுகளுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இந்த குடிநீர் இணைப்பை பெறுவதற்கு உதவிய அந்த சவூதி அரேபிய தனவந்தர்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X