2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கான  பிரதேச அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பசீர்; சேகுதாவூத்  தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திவிநெகும, ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு, கிராமிய பாடசாலை அபிவிருத்தி, விசேட வேலைத்திட்டம் போன்றவை  ஆராயப்பட்டு திட்டங்கள் முன்மொழியப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இதன்போது, சமூக சேவைகள் அமைச்சால் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட  10 பேருக்கு சுயதொழில் உதவிக் கொடுப்பனவாக தலா 30,000 ரூபாய் படி 300,0000 ரூபாய் வழங்கப்பட்டது.

முதல் கட்ட தற்செயல் நிவாரணக் கொடுப்பனவாக 06 பேருக்கு தலா 10,000 ரூபாய் படி   வழங்கப்பட்டதுடன், வலது குறைந்தோருக்கு 06 சக்கர நாற்காளிகளும் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்  நிஹாரா மௌஜுத், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.முரளீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X